Wednesday, February 20, 2013

பயிற்சி

உச்சந்தலையில் அழுத்தமும் செவிகளில் இறுக்கமும்
தூண்டுமாம் மூளையின் செயல்பாட்டை.
இன்று புரிகிறது...
பெற்ற குட்டுகளும் இட்ட தொப்புகரனங்களும்
பள்ளி தந்த தண்டனையல்ல, பயிற்சி!