நேரம் : காலை 8:30
ரயில் வண்டியில்…
சாப்பாட்டுத்தட்டை மேளமாக்கிய குரு
- 9 வயது அக்கா
அதற்கேற்ற குட்டிகரணம் அரங்கேற்றிய சிஷ்யன்
- 6 வயது தம்பி
சொற்ப சில்லரைகளுடன் நிர்வாண கால்களால்
எனை மிதித்திரங்கிய அந்த உழைப்பாளிகளின் தடத்தை
அழிக்க மனமில்லாமல் நான்!
No comments:
Post a Comment